5.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியாவில் சக்தி வாய்ந்த டாப்-10 மனிதர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா டுடேவின் நவம்பர் மாத இதழில் இந்தியாவின் அதிகார சபை என்ற தலைப்பில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மோடி, அமித் ஷா, மோகன் பகவத் என நீளும் பட்டியலில் 5 மாநில முதலமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*மக்கள் தொகை மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மோடி அரசுக்கு அழுத்தம் அதிகமாகியுள்ளது என்கிறார் கட்டுரையாளர் சிகா முகர்ஜி.
* தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பூசானி வெங்கடேஷ்வர ராவ் தலைமையிலான குழு, இரண்டும் நடத்தும்.
* பொது சிவில் சட்டம் பழங்குடியினருக்கு பொருந்தாது என்ற ஒன்றிய அரசின் பேச்சு, இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பொருந்தாது என்பதை தெளிவுபடுத்துகிறது என்கிறது தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்; உள்துறை அமைச்சர் அமைதியாக இருந்தால் அவரது பதவியை நானே ஏற்பேன்: துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரிக்கை.
* மத்திய பல்கலைக்கழகங்களில் ஒதுக்கப்பட்ட காலியிடங்களை மோடி அரசு நிரப்பவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்.
* முதலில் மில்கிபூர் இடைத்தேர்தல் ஒத்தி வைக் கப்பட்டது, இப்போது மீதமுள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. பாஜக ஒருபோதும் இந்த அளவிற்கு பலவீனமாக இல்லை” பாஜக தோல்வியை கண்டு அஞ்சுவதாகவும், தாமதப்படுத்தும் உத்திகளை கையாள்வதாகவும் அகிலேஷ் குற்றச்சாட்டு..
– குடந்தை கருணா