சமுதாயம் வேறு, அரசியல் வேறு என்று கூறுவது சரியா? சமுதாய அமைப்பை சரிவர நடத்துகின்ற கடமை யாருக்குரியது? அரசாங்கத்திற்குத் தானே அந்தக் கடமை உண்டு. சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்துவமாகுமானால் – நமது மதம் நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்ற நிலையில் அதனால் மக்களுக்கு என்ன பயன்? நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல்லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழ வேண்டியது என்ற தலைகீழ் தத்துவத்தில் உள்ளதால் இந்த அரசாங்கத்தாலும்தான் மக்களுக்கு என்ன பயன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’