திருச்சி, நவ. 5- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 28.10.2024 மற்றும் 29.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக பாரதியார் நாள் மற்றும் சுதந்திர நாள் விளையாட்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட் டங்களின் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மாணவர்கள் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
17 வயதிற்கு உட்பட் டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் பி.சர்வின் சஞ்சய் முதலிடத்தோடு தங்கப் பதக்கமும், கோலூன்றித் தாண்டுதல் போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பதினோராம் வகுப்பு மாணவர் என்.ஷைபுல் அஜ்மான் ஜெய்லானி முதலிடத்தோடு தங்கப் பதக்கமும் வென்றனர்.
இவ்விரு மாணவர்களும் மாநில அள விலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரை பள்ளியின் தாளாளர்,முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் ஆகியோர் பாராட்டி மகிழ்ந்தனர்.