தாம்பரம், நவ. 5- தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 2.11.2024 அன்று மாலை 6 மணியளவில் “தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம்” சார்பில் 11 ஆவது சிறப்புக் கூட்டத்தில் “தமிழிசை திரைப்பாடல்களில் பகுத்தறிவு” என்னும் தலைப்பில் சைதாப்பேட்டை அரசு நன்முறை மேல்நிலை பள்ளி தமிழாசிரியர் முனைவர் க.சங்கர் பகுத்தறிவுடன் சிறப்பான தமிழ் திரைப்பட பாடல்களை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.
பாடலாசிரியர்கள் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி, கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணன், பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், புலமைப்பித்தன், வாலி மற்றும் வைரமுத்து ஆகியோரின் பகுத்தறிவுக் கவித்திறனை பெருமைப்படுத்தினார்.
கவிஞர்களின் தொலைநோக்கு சிந்தனைகளை மக்கள் மெய்சிலிர்க்கும் வகையில் மிக சிறப்பாக எடுத்துரைத்து மிகத் தெளிவாக உரையாற்றினர்.
மக்கள் பெருந்திரளாக க.சங்கர் அவர் களின் உரையைக் கேட்டு மகிழ்ந்தனர். கூட்ட நிறைவாக கழக மாவட்டத் தலைவர் ப.முத்தையன் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர்.
முடிவில் மக்கள் கேட்ட கேள்வி களுக்கு சங்கர் விளக்கமாக பதில் வழங்கி நிறைவு செய்தார்கள்.