கோவிலில் “புனித நீர்” என பக்தர்களை பரவசப்படுத்தியது ‘ஏசி’யிலிருந்து வெளியேறிய தண்ணீர் என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா அருகே விருந்தாவனம் பகுதியில் உள்ளது தாகூர் பாங்கே பிஹாரி கிருஷ் ணன் கோவில். இந்த கோவிலின் யானை சிற்பத்தில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுந்து வருகிறது. இது கிருஷ் ணரின் பாதத்தில் இருந்து வரும் புனித நீர் (சரணமிர்தம் – தீர்த்தம்) என கோவில் பூசாரிகள் கூற, கோவிலுக்கு வரும் மக்கள் அதனை குடித்தும், பாட்டிலில் பிடித்து வீட்டிற்கும் எடுத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், யூடியூபர் ஒருவர் (அவர் பெயரை வெளியிட விரும்ப வில்லை),”யானை சிற்பத்தில் இருந்து விழும் தண்ணீர் புனித நீர் அல்ல. அது ‘ஏசி’யில் இருந்து விழும் தண்ணீர். ‘ஏசி’யிலிருந்து வெளியேறும் தண்ணீரைத் தான் மக்கள் புனித நீராக எடுத்துச் செல்கின்றனர்” என போட்டுடைத்துள்ளார்.
இந்த காட்சிப் பதிவை “டிவி 1 இந்தியா” தொலைக்காட்சி அலைவரிசை வெளியிட சமூகவலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. மேலும் காட்சிப் பதிவு வெளியான பின்பும் ‘ஏசி’ நீரை எடுத்துச் செல்வதற்கு கப் (டீ குடிக்கும் கோப்பை) மற்றும் பாட்டில் கொடுத்து காணிக்கை என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக இணையவாசிகள் குற்றம் சாட்டி யுள்ளனர்.