மாவட்ட ஆட்சியரிடம் கழகத் தோழர்கள் மனு!!
காரைக்குடி, நவ. 4- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் 7 ஏக்கர் பரப்பளவில் “மினி விளையாட்டு அரங்கம்” அமைக்க தமிழ்நாடு அரசு உத்தர விட்டு சுற்றுப்புற சுவர்கள் கட்டப் பட்டு மற்ற பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் அந்த அரங்கில் சுமார் ரூ. 3 கோடி மதிப்பிலான 26 சென்ட் நிலத்தில் வட கிழக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ள கோயில் மற்றும் கட்டு மானங்களை அகற்றிட காரைக்குடி வட்டாட்சியரிடம் மாவட்ட கழக தோழர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் உடன டியாக தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு ஆறு மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச் சொல்லி மீண்டும் மனு ஒன்றை சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) மாவட்ட கழக தலைவர் ம.கு.வைகறை, மாவட்ட கழக செயலாளர் சி.செல்வமணி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, காரைக்குடி மாநகர கழக துணைத் தலைவர் பழனிவேல் ராசன், மாநகர கழக செயலாளர் மு.பிரவீன் ஆகியோர் நேரில் சென்று அளித்தனர்.
இந்த மனு அளித்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேற்கண்ட கோவில் ஆக்கிரமிப்பு பகுதியில் பாதை அமைத்து பெரிய அளவிலான கதவு வைத்து அந்த கோவிலின் பெயரும் எழுதப்பட்டுள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? அரசு நிலத்தை ஆக்கிரமிக்க அரசு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதா?