சென்னை, நவ.4- சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் வர்ணாஸ்ரம எதிர்ப்பு திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நேற்று (3.11.2024) மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.
அறிவுமானன் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி யுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
ஆர்ப்பாட்ட ஒலிமுழக்கங்களை மு. இளமாறன், திருச்சி அறிவுச்சுடர், வே. நர்மதா, த.சீ. இளந்திரையன், காஞ்சி கதிரவன், பூவை செ.பெ. தொண்டறம், நாத்திக. பொன்முடி ஆ.ஜெ. உமாநாத், இரா. செந்தூர்பாண்டியன், கும்மிடிப்பூண்டி சக்கரவர்த்தி, ஈரோடு வெற்றி உள்ளிட்ட இளைஞரணி, மாணவர் கழகk் பொறுப்பாளர்கள் எழுப்பினர்.
கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த் தினி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை எட்வின் அறம் மதி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன், ஊடகவியலாளர் செந்தில்வேல், துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாக கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்டத்தின் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் துணைப்பொதுச்செயலாளர் பொறி யாளர் ச.இன்பக்கனி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாணவர் கழகம் இளமாறன், தொண்டறம், கழக பேச்சாளர் நர்மதா, பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம், கவிஞர் கண்மதியன், தஞ்சை விசிறி சாமியார் , வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன் உள்ளிட்ட தலைமைக்கழக அமைப்பாளர்கள். மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
தென்சென்னை, வடசென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு, விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, திருவண்ணாமலை, சிதம்பரம், விருத்தாசலம், செய்யாறு, புதுச்சேரி, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு கழக மாவட்டங்களிலிருந்தும் கழகப்பொறுப்பாளர்கள் தனி வாகனங்கள்மூலம் பெருந் திரளாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் நன்றி கூறினார்.