ஒவ்ெவாரு ஆண்டும் தீபாவளி அன்று அயோத்தியில் லட்சக்கணக்கான விளக்குகள் வைக்கப்படும். மேலும் தீபாவளிக் கொண்டாட் டங்களுக்கு அயோத்தியில் உள்ள பல முக்கிய தலைவர்கள் முதல் நாடு முழுவதுமுள்ள பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு அயோத்தி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவ்தேஷ் பிரசாத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அவர் கூறும் போது, “நான் ஊடகங்களின் வாயிலாகத்தான் தெரிந்து கொண்டேன், வெளிநாட்டில் உள்ள பிரபலங்களை எல்லாம் அயோத்தி தீபாவளித் திருநாளிற்கு அழைத்துள்ளனர். ஆனால் எனக்கு அழைப்பு இல்லை; திருவிழா என்பதை நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் எதிரொலிக்கும் விழாவாக பார்க்கிறேன். ஆனால் ஒற்றுமையைக் குலைக்கும் வகையி லும் நமது கலாச்சாரத்திற்கு எதிராகவும் செயல்படுகின்றனர். பாஜகவின் தீபோற்சவத்தில் அழைப்பிதழ் பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் இடமில்லை.” என்று கூறியுள்ளார்.
அயோத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பவுத்த சமயத்தைச் சேர்ந்த அவ்தேஷ் பிரசாத் – இவர் (பவுத்த மதத்தை ஹிந்துக்கள் பட்டியலில்தானே வைத்துள்ளனர்) பாஜக வேட்பாளரை பல ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் தோற்கடித்தார். அங்கு பாஜக தோல்வி அடைந்ததில் இருந்தே ஒன்றிய அரசு அயோத்தியைப் புறக்கணித்து வருகிறது.
அயோத்தி நாடாளுமன்ற தோல்வியால் மோடி அதிகம் பாதிக்கப்பட்டார், இதனால் அவர் ஜெய் சிறீராம் என்பதற்கு மாற்றாக ஜெய் ஜெகன்நாத் என்று கூறியது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததில் இருந்து இன்றுவரை அயோத்திக்குச் சென்றதும் இல்லை. அவர் தேர்தலுக்கு முன்பு அறிவித்த அயோத்தி நவீனமயமாக்கல்-2024 என்ற திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ரூ.5000 கோடி திட்டம் குறித்தும் எதுவுமே பேசவில்லை
உத்தரப் பிரதேசத்தில் கான்பூர் சட்டமன்ற உறுப்பினரின் மனைவி தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் வழிபட்ட கான்பூர் சிவன் கோவிலை கங்கை நீர் ஊற்றி தீட்டுக் கழித்தனர்.
கனோஜில் உள்ள சிவன் கோவிலுக்கு அகிலேஷ்யாதவ் சென்றதால் அதனையும் கங்கை நீர் ஊற்றி தீட்டுக் கழித்தனர். தற்போது அயோத்தி நாடாளுமன்ற உறுப்பினரையும் அயோத்தி தீபோற்சவத்திற்கு அழைக்காமல் அவமானப்படுத்தி உள்ளனர்.
எதிலும் பிளவுபடுத்துவதே பா.ஜ.க.வின் நோக்கம். ஹிந்துக்களே ஒன்று சேருங்கள் என்று ஒரு பக்கத்தில் முழக்கம். இன்னொரு பக்கத்தில் ஜாதி அடிப்படையில் ஹிந்துக்களைப் பிளவுபடுத்துவதே – அவர்களின் சிந்தனையும், செயலுமாக இருக்கிறது.
எஸ்.ஸி., எஸ்.டி., மக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தீண்டாமை சட்டப்படி ஒழிக்கப்படுகிறது என்று சொன்னாலும் – ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களைப் பொறுத்தவரையில் தீண்டாமை என்பது அவர்களின் அடிப்படை குருதி சட்டமாகவே இருந்து வருகிறது.
குடியரசுத் தலைவரையே நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்கோ, திறப்பு விழாவுக்கோ அழைக்கவில்லையே!
ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றாய் இணைந்து சங்பரிவார், பிஜேபியின் மக்கள் விரோத – சட்ட விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும். நாம் அனைவருமே ஒன்றிணைந்து செயல்பட உறுதி கொள்வோம்!