ஓட்ஸ், கஞ்சி, முழு கோதுமை போன்ற தானிய வகைகளை இது போன்ற குளிர் காலங்களில் சாப்பிடுவது சிறந்தது.
அடிக்கடி பீட்சா, பாஸ்தா போன்ற உணவுகள் சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், அன்றாடம் ஒரு வேளையாவது ஓட்ஸ், கஞ்சி, முழு கோதுமை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது நமது உடலை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது.
தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப இது போன்ற தானியங்களை வைத்து விதவிதமான உணவு வகைகளை சமைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குறிப்பாக கோதுமையை கொண்டு தயாரிக்கப்படும் சான்வெட்ச்,முட்டை காய்கறிகள் கொண்டு செய்யப்படும் ஸ்ப்ரிங் ரோல், சூடான பால் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
சூப்
குளிர்காலத்திற்கு ஏற்ற ஒரு உணவு வகை என்றால் அது சூப். அதுவும் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் சூப்புகள் நமது உடலை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது.
பருப்பு வகைகள், பாகற்காய் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் சூப்புகள் மிகவும் ஆரோக்கியமானவை. கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த பொருட்களை இந்த சூப்பில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
சீரகம், லவங்கப்பட்டை மற்றும் இஞ்சி போன்ற மசாலா பொருள்களும் உங்களை குளிர் காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இது போன்ற உணவுகளை நள்ளிரவு சிற்றுண்டியாக அல்லது மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.
உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்
பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் போன்றவற்றில் நல்ல கொழுப்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இவை நமது உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
அத்திப் பழங்கள், பேரீச்சை பழங்கள் போன்றவை இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற உலர்ந்த பழங்கள் ஆகும். அதிக குளிர்ச்சி நிலவும் நாடுகளில் பெரும்பாலும் இந்த உலர் பழங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், இது குளிர் காலத்திற்கு மிகவும் ஏற்றது. கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அளவு உலர் பழங்களை சாப்பிடலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உலர் பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் லட்டு போன்றவற்றையும் உண்ணலாம். பொடி செய்யப்பட்ட உலர் பழங்களை குழந்தைகளுக்கு பால் அல்லது தானியக் கலவையில் கலந்து கொடுக்கலாம்.
இறைச்சி
அசைவ உணவு உண்பவர்கள் அன்றாடம் உங்களது உணவில் இறைச்சியை ஒரு பகுதியாக கொண்டிருக்கலாம்.
இவை வளர்ச்சிதை மாற்றத்தின் போது உடல் வெப்பநிலை அதிகரிக்க உதவுகிறது.
இறைச்சியில் அதிக அளவில் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி கர்ப்பிணி பெண்களின் உணவுகளில் இறைச்சியை சேர்த்துக் கொள்ளலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இறைச்சியை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு இறைச்சி கொடுக்கத் தொடங்கலாம்.
தேன்
தேன் அதிக அளவில் நமது வீடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பாரம்பரியமாக இருமல், சளி என்று வந்தால் தேன் சாப்பிடுவது நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம்.
தேனை உங்கள் உணவுகளில் அல்லது சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் எனில் தேனை சேர்த்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஒரு வயது ஆன பிறகு தேனை கொடுக்க ஆரம்பிக்கவும். இந்த தேன் நமது உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இந்த வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றினாலே போதும் பக்கவாதம் வராமல் தடுத்திடலாம்…
சூடான பானங்கள்
குளிர் காலத்தில் நாம் அதிகமாக சூடான பானங்களை அருந்த வேண்டும் என்று நினைப்போம். குளிர் காலத்தில் இதுபோன்ற சூடான பானங்களை அருந்துவது நமது உடலை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆனால் காபியை ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அருந்தாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹாட் சாக்லேட், தேநீர், ஒரு கப் சூடான பால் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்பிணி பெண்கள் பிரசவம் வரை காபின் கலந்த பானங்களை தவிர்ப்பது நல்லது. காஃபைன் நீக்கப்பட்ட பானங்கள் போன்றவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 2 கப் தேநீர் அல்ல காபி அருந்தலாம். குழந்தைகளுக்கு ஹாட் சாக்லேட், காபி, டீ போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.