சென்னை, நவ.4- அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் களுக்கான ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் இடைநிலை (பொறுப்பு) விஜயன், உதவி திட்ட அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற குழந்தைகளைத் தொடா்ந்து படிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்வது, கற்றல் கற்பித்தலை மேம்படுத்துவதற்காக ஆசிரியா்களும், மாணவா்களும் பெற்றோா்களும் செய்ய வேண்டியது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தோ்ச்சி வீதத்தை எவ்வாறு அதிகரிப்பது, பள்ளில் வளாகம், சுற்றுப்புறம், வகுப்பறை தூய்மையை பேணுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 2023 – 2024ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி வீதத்தில் 100 சதவீதம் பெற்ற 49 பள்ளிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பள்ளித் துணை ஆய்வாளா்கள் பெரியசாமி, கிருஷ்ண மூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.
தீபாவளிப் பரிசு!
பஞ்சாப்: ரயிலில் பட்டாசு வெடித்ததில் 4 பேர் காயம்
பட்டியாலா, நவ. 4- பஞ்சாபில் ஹவுரா ரயிலில் பிளாஸ்டிக் வாளியில் பயணி கொண்டு சென்ற பட்டாசு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் இருந்து ஹவுராவுக்கு 2.11.2024 அன்று இரவு 10.30 மணியளவில் ஹவுரா ரயில் சென்று சொண்டிருந்தது. ஃபதேகர் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது பயணி கொண்டு சென்ற பட்டாசுகள் அடங்கிய பிளாஸ்டிக் வாளி திடீரென வெடித்தது.
இதில் ஒரு பெண் உட்பட 4 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் ஃபதேகர் சாஹிப் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று ரயில்வே காவல் அதிகாரி ஜக்மோகன் சிங் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், ரயிலின் பொதுப் பெட்டியில் பிளாஸ்டிக் வாளியில் கொண்டு செல்லப் பட்ட பட்டாசுகள் வெடித்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் மேலும் கூறினார். மாதிரிகள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். இந்த நிகழ்வு குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.