ஒசூர், ஜூலை 29- மணிப்பூர் கலவரம் அதனைத் தொடர்ந்து மலைவாழ் பெண்களை நிர்வாணப்படுத்தியும், படுகொலைகள் நடந்திட காரணமான ஒன்றிய அர சையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து ஒசூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாநகர தலைவர் அப்துல்லா ஷரிப் தலைமையில் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் அல்தாப் தொடக்கவுரை ஆற்றினார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கீர்த்திகணேசன்,திராவிடர் கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் தொகுதி செய லாளர் எம்.ராமசந்திரன்,சிபிஎம் ஜெயராமன் மாநகர செயலாளர் சிபிஅய் மாதையன் – மாவட்ட நிர்வாக குழு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்ட தலைவர் தினேஷ்,மக்கள் அதிகாரம் ரவிச்சந்திரன், தமிழ்தேச குடியரசு இயக்கம் ஆஷா, புரட்சிகரதொழிலாளர் முன் னணி கார்கி, தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், திராவிடர் சிட்டி மூமென்ட் அபி, தமிழக வாழ்வுரிமை கட்சி சபரி,கிருத்துவ அமைப்புகள் சார்பில் மைக்கல்ராஜ், இறுதியாக மாவட்ட தலைவர் ஜகீர் ஆலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வனவேந்தன்,மனிதநேய மக்கள் கட்சி மாநில பொறுப் பாளர் அதாப்,தமிழ்தேச குடியரசு இயக்கம் விக்னேஷ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர்கள், கிருத்துவ அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.