வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ‘மநுவாத சூழ்ச்சியை, முறியடித்து சமூகநீதியும், சமத்துவமும் தவழும் சுயமரியாதை உலகு படைக்கும் நோக்கத்துடன் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் நேற்று (3.11.2024) மாலை சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகே திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தஞ்சை விசிறி சாமியார் பச்சை பயனாடை அணிவித்து போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார். கழக இளைஞரணி, மாணவர் கழக தோழர்கள் உணர்ச்சி முழக்கமிட்டனர். இப்போராட்டத்தில் எழுச்சி உரையாற்றியவர்களின் உரைகளை உணர்ச்சியுடன் செவிமடுத்தோர்.