மதுரா, நவ. 3- உத்தரப்பிரதேசத்தின் மதுராவின் பிருந்தாவன் பகுதியில் கவுரி கோபால் ஆசிரமம் உள்ளது. இங்கு 1.11.2024 அன்று பக்தர்களுக்கு பிரசாதமாக கிச்சடி வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்காக ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு வழங் குவதற்காக ஒருவர் கிச்சடியை பானையில் எடுத்து வந்தார்.
அப்போது அவரது கையில் இருந்து திடீரென அந்த கிச்சடி பானை தவறி கீழே விழுந்தது. அதில் இருந்த கிச்சடி பக்தர்கள் மீது சிதறியது. இதில் 10 பெண் பக்தர்கள் காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஆக்ராவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.