கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான பிரசவம் தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்

Viduthalai
2 Min Read

சென்னை, நவ.3 உடல்நல பிரச்சினைகள், இணை நோய்கள் உள்ள கர்ப்பிணிகளுக்கு பாது காப்பான பிரசவத்தை உறுதி செய்ய, புதிய திட் டத்தை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மகப் பேறு உயிரிழப்புகளை கட்டுப்படுத்த பல் வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. தாய் – சேய்உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறப்பு திட்டம் செயல் படுத்தப்படுகிறது.சில கர்ப்பிணிகள் பிரசவ காலத்தில் பல்வேறு உடல் நல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.பிரசவத்துக்கு பிந்தைய அதிக ரத்தப்போக்கு, உயர்ரத்த அழுத்த பாதிப்புகள், ரத்தத்தில் கிருமி தொற்று, இதய பாதிப்பு மற்றும்பல்வேறு நோய்கள் காரணமாக பிரசவகால உயிரிழப்புகள் நேரிடுகின்றன. இதை தடுக்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

‘பிக்மி’ தளத்தில் பதி வேற்றம்: இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும். அவர்களில் இணைநோய் உள்ளவர்கள், பிரசவகால உடல்நல பாதிப்புகள், சர்க்கரை நோய்க்கு ஆளானவர்கள் கண்டறியப் படுவார்கள். அவர்களை பற்றிய விவரங்கள், கர்ப்பிணிகளுக்கான ‘பிக்மி’ (PICME) பதிவு தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.பின்னர், அவசரகால மகப்பேறு மற்றும்குழந்தைகள் நல (‘சீமாங்க்’) மருத்துவ மய்யங்களுக்கு இந்த தகவல் அளிக்கப்படும். அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கட்டமைப்புகள் ஒருங்கிணைக்கப ்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள 129 சீமாங்க் மய்யங்களில் 24 மணி நேரமும் மகப் பேறு மருத்துவர்கள், அவசரகால மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். இதன்மூலம், உடல்நல பிரச்சினைகளுடன் அனுமதியாகும் கர்ப்பிணி களுக்கு பாதுகாப்பான பிரசவம் உறுதி செய்யப் படும். இந்த நவம்பர் மாதத்தில் பிரசவத்துக்காக காத்திருக்கும் 76,473 கர்ப்பிணிகளில், 29 சதவீதம் பேருக்கு உடல்நலக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அருகே உள்ள சீமாங்க் மய் யங்கள் அல்லது அவர்கள் விரும்பும் உயர் வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகளில் அவர்களை முன்கூட்டியே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *