லக்னோ, நவ.3 லக்னோவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் தீபாவளி அன்று சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் உட்பிரகாரம் முழு வதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதிலிருந்து வெளியேறும் நீர் கோவிலின் வெளிப்புறச்சுவற்றில் உள்ள துளை வழியாக வெளியேறும் வகையில் செய்யப்பட்டிருந்தது,
இந்த நிலையில் கோவிலுக்கு வந்து வெளியேறிய பக்தர்கள் குளிர்சாதனக் கருவியில் (ஏ.சி.) வந்த நீரை கிருஷ்ணன் பாதத்தில் இருந்து வரும் நீர் என்று நினைத்து (சரண் அம்ரித்) குடித்துள்ளனர்.
அந்த நீரைக் குடித்ததில் பலருக்கு சிறிது நேரம் கழித்து கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அந்த இயந்திரத்தில் இருந்து வெளியேறும் (அவுட்புட்)நீரில் தூசிகள் கரைந்து இருக்கும். அதேபோல் தாமிரக் குழாய் வழியாக வருவதாலும், ஏசி இயந்திரத்திற்குப் பயன்படும் டைபுரோக்ரோமைத்தேன், மற்றும் புரேப்பேன் Difluoromethane (R-32) Propane (R-290) என்ற ஆபத்தான வாயுவின் நீராவியும் கலந்து அமிலத்தன்மை கொண்ட தாக இருக்கும்.
அந்த நீரை செடிகளுக்குக் கூட ஊற்ற மட்டார்கள். செடிகளில் ஊற்றினால் உடனடியாக செடி கள் கருகிப் போய்விடும்
ஆனால், இதனை அறியாமல் பலர் கோவிலில் இருந்து வந்த குளிர்பதனக் கருவி நீரைக் குடித்து உள்ளனர். கோவிலில் செய்தி சேகரிக்கச் சென்ற ‘டிவி 1 இந்தியா’ என்ற செய்தி சேனலின் ஊடகவியலாளரும் தொலைக்காட்சி நேரலையில் குடித்துள்ளார்.
அவரும், ஒளிப்பதிவாளரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கோவில் நிர்வாகம் விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. மேலும் தீபாவளி அன்று பக்தர்கள் விரதம் இருந்து வருவார்கள். வெறும் வயிற்றில் பிரசாதம் சாப்பிட்டதால் சிலருக்கு சிறு உபாதைகள் ஏற்பட்டிருக்கலாம் யாரும் ஏசி நீரை குடிக்கவில்லை என்று கோவில் அர்ச்சகர் கூறி யுள்ளார்.