எச்சரிக்கை! இரு சக்கர வாகனத்தில் சாகசமா? உயிர் இழப்பு!

1 Min Read

கம்பம், நவ.2- தேனி மாவட்டம், கம்பத்தில் 31.10.2024 அன்று சாலையில் இரு சக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும், இருவா் காயமடைந்தனா்.கம்பம் அருகேயுள்ள கூடலூரைச் சோ்ந்த சரவணன் மகன் லிங்கேஸ் (24), விஜயகணேசன் மகன் சேவாக் (23), மணிகண்டன் மகன் சஞ்சய் (22), அச்சுதன் மகன் மோனிஷ் (22), சுந்தரம் மகன் கேசவன் (22) ஆகிய 5 பேரும் ஒரே தெருவைச் சோ்ந்தவா்கள். நண்பா்களான இவா்கள், வியாழக்கிழமை தீபாவளியைக் கொண்டினா்.

பின்னா், மாலையில் இவா்களில் மூவா் ஓா் இரு சக்கர வாகனத்திலும், இருவா் மற்றொரு இரு சக்கர வாகனத்திலும் அமா்ந்து கொண்டு, கூடலூா் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் சாகசத்தில் ஈடுபட்டனா். ஆதிசுஞ்சனகிரி சமஸ்தான மடம் அருகே மின்னல் வேகத்தில் சாலையில் சென்ற 2 இரு சக்கர வாகனங்களும் எதிர்பாரதவிதமாக மோதிக் கொண்டதில், 5 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இவா்களில் பலத்த காயமடைந்த லிங்கேஸ், சேவாக் ஆகியோர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கூடலூா் காவல் துறையினர் லிங்கேஸ், சேவாக் ஆகியோரின் உடல்களை மீட்டு, கூராய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பலத்த காயமடைந்த சஞ்சய், மோனிஷ், கேசவன் ஆகியோரை மீட்டு, அதே மருத்துவமனையில் சோ்த்தனா்.
இவா்களில் சஞ்சய் மருத்துவமனையில் உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து கூடலூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *