நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ராசேந்திரனின் அன்னையார் பேச்சியம்மாள் (வயது 90) நேற்று (1.11.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. எவ்வித மூடநம்பிக்கை சடங்குகளுமின்றி அடக்கம் நடைபெற்றது. மறைந்த அம்மையாருக்கு ஏழு மக்கள் – அதில் ஒருவர் மறைவு.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாவட்டத் தலைவர் அ.ராசேந்திரனிடம் தொலைப்பேசி மூலம் அவரது அன்னையார் மறைவுக்கு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.