2004 ஜனவரி 23ஆம் தேதி சிறீரங்கத்தில் நடந்த திருமண விழாவின்போது ஏற்பட்ட தீ விபத்து!!
மணமகள் ஜெயசிறீயின் தாத்தா சிறீரங்கத்தில் ஆன்மிக வேத உபன்யாசத்திலும் ஜோதிடத்திலும் கை தேர்ந்தவர். மிகச் சிறந்த முகூர்த்த நாளை(?) தேர்ந்தெடுத்து சிறீரங்கம் கோவிலில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள பத்மப்ரியா திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகளை செய்தார். அதிக கூட்டம், குறுகலான நுழைவு வாயில், நெருக்கமான மண்டபம் இந்த சூழலில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 20 பெண்கள் உட்பட 64 பேர் மரணம் அடைந்தனர். 33 பேருக்கு காயம் ஏற்பட்டது. அந்தோ பரிதாபம்! மணமகன் குரு ராகவேந்திரனும் இந்த தீ விபத்தில் மரணம் அடைந்தார். இதில் முக்கிய திருப்பமாக மணப்பெண்ணுடைய தாத்தா அவரும் தீயில் சிக்கி மரணம் அடைந்தார்.
இந்த மரணங்களின் வழியாக நமக்கு தெரிகிற செய்தி அருகில் இருந்த கடவுளும் வரவில்லை!
ஜோதிடமும் கை கொடுக்கவில்லை!!
உலகம் திரும்பிப் பார்த்தது – மூடநம்பிக்கையாளர்கள் இன்னும் திரும்பிப் பார்க்கவில்லை!!