பட்டாசு வெடித்து ஒருவர் பலி
அமராவதி, நவ.1 ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தில் வைத்து பட்டாசு களை எடுத்து சென்றபோது, திடீரென பட்டாசுகள் வெடித்துள்ளன. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஏலுரு மாவட்டத் தில் இந்த விபத்து நடந்திருக்கிறது. தீபாவளிக்காக இளைஞர்கள் இருவர் வெங்காய வெடி உள்ளிட்ட பட்டாசுகளை வாங்கிக்கொண்டு அதை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஓரிடத்தில் மேடு பள்ளம் வந்திருக்கிறது. வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தில் அதில் ஏறி இறங்க.. உடனடியாக பட்டாசுகள் உரசி தீப்பிடித்து எரிந் துள்ளன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியுள்ளன. இதில் இரு சக்கர வாக னத்தில் இருந்த இருவரும் கடுமையான தீக்காயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் சிலர் இருந்திருக்கின்றனர். அவர்களும், கடுமையாக தீக்காயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழ்வு தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், வெங்காய வெடியில் உரசல் ஏற்பட்டதே, வெடி விபத்துக்கு காரணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் ஓட்டி வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட்டாசுகளை கவனமாக கையாள வேண்டும் என்று தீயணைப்பு துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக தீபாவளி நாளன்று கவனக்குறைவாக பட்டாசை கையாளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன என்றும், இது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திடுவிடுகிறது என்றும் தீயணைப்புதுறை கூறியுள்ளது.
காரியாபட்டியில் பட்டாசு வெடித்து பயங்கர தீ விபத்து
விருதுநகர், நவ.1- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக அச்சம்பட்டி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனிடையே குறுகிய சாலை வழியாக தீயணைப்பு வாகனம் நுழைய முடியாததால், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.