சென்னை, நவ.1 பொதுமக்களின் நன் மைக்காகவும், வசதிக்காகவும் ஏராளமான அறிவிப்புகளை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், தற்போதும் புதிய அதிரடியை கையில் எடுத் துள்ளது.. இந்த அதிரடியானது, இன்று (1.11.2024) முதல் அமலுக்கு வர உள்ளது.
கோப்புகளையும் கையாளுவதில், வெளிப்படைத்தன்மை ஏற்படுத்த, முழுக்க ‘டிஜிட்டல்’ முறைக்கு மாறுகிறது, தமிழ்நாடு மின் வாரியம். இன்று முதல் இது அமலுக்கு வருகிறது. அரசுத் துறைகளில் காகித பயன் பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக் கவும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
காகிதமில்லா சட்டப்பேரவை: அதன்படி, சட்டப்பேரவை செயலகத் தின் பல்வேறு ஆவணங்கள், கோப் புகள் கணினிமயமாக்கப்பட்டன.. “காகித மில்லா சட்டப்பேரவை” திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் காகிதச் செலவை குறைக்க நட வடிக்கை மேற் கொள்ளப்பட்டது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது. அதே போல, அரசு அலுவலகங்களிலும் காகித கோப்புகளுக்கு பதில், மின்னணு கோப்பு களைத் தயாரிக்கும் நடைமுறை “மின்-அலுவலகம்” திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படுகிறது. இதன்மூலம், அரசு அலுவலகங்களின் வழக்கமான பணிகள் மின்னணு மயமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரத்யேக மென் பொருள் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
ஒப்பந்த நிறுவனங்கள்: அந்தவகையில், தமிழ்நாடு மின்வாரிய துறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இதற்கு காரணம், மின் சாதனங்கள் கொள்முதல், கட்டுமானம் உள்ளிட்ட பணிகள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக செய்யப்படுகின்றன. இந்த பணிகளுக்கு மதிப்பீடு தயாரிப்பது, ஒப்புதல் பெறுவது, அனுமதி அளிப்பது என பல்வேறு பணிகளுக்கு காகித கோப்புகளே தயாரிக் கப்படுகின்றன. இவற்றை ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அலுவலர்கள் தயாரித்து, உயர் அதிகாரிகள் வழியாக, மின் வாரியத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவது வழக்கமாகும்.
இது தவிர, மாவட்ட மற்றும் மண்டல அலுவலகங்களில் செய்யப்படும் முக்கியப் பணிகளுக்கு, தலைமை அலுவலக உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக, அஞ்சல் அல்லது பணியாளர்கள் வாயிலாக கோப்புகள் அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்படுகிறது. ஆனால், கோப்புகள் தயாரிக்க, அதிக காகிதம் பயன்படுத்துவதால், செல வுகள் மிக அதிகமாகி விடுகின்றன. அதுமட் டுமல்லாமல், கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்வது, கோப்பை வேண்டுமென்றே தொலைத்து விடுவது என ஏகப்பட்ட முறைகேடுகளும் நடக்கின்றன.
இன்று முதல் அமல்: இதற்கெனவே கடந்த 2021-இல் “இ – ஆபிஸ்” என்ற நடை முறைகொண்டுவரப்பட்டது. அதாவது கணினியிலேயே கோப்புகளை கையாளும் முறை இதுவாகும்.. இணைய வழியில் இப்படியொரு வசதி இருந்தாலும், காகித கோப்பு நடைமுறையே நீடித்து வந்தது.. எனவே, இதனை முழுதுமாக தடுத்து நிறுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட, மண்டல அலுவலகங்களில் இருந்து, தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் பெற, காகித கோப்பிற்கு பதில், கணினி வழி நடவடிக்கைகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதேபோல், தலைமை அலுவலகத்தில், மதிப்பீட்டிற்கு ஒப்புதல் பெறுவது, அனுமதி அளிப்பது, லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்க பிரிவு கோப்புகள் என அனைத்துமே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
புதிய நடைமுறை: இந்த புதிய நடைமுறையால், எந்த கோப்பு, எந்த அதி காரியிடம், எவ்வளவு நேரம் இருந் தது? என்பதையெல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.. மேலும், தாமதம் செய்யாமல், விரைந்து ஒப்புதல் பெற உதவும் இந்த முறையால், வெளிப் படைத்தன்மை ஏற்படும் என்று மின்சார வாரியம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.