சென்னை, நவ.1- தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாடு அரசால் தொடக்கப் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க உறுப்பி னர்களுக்கு 18.12.2023 முதல் பால் கொள்முதல் ஊக்கத்தொகை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது நாளது தேதி வரையிலான காலத்திற்கு ரூபாய் 140.98 கோடி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் 3.86 இலட்சம் உறுப் பினர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Leave a Comment