சிவப்பு டைரி அல்ல, சிவப்பு சிலிண்டர் குறித்து பேசுங்கள் மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பதிலடி!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

ஜெய்ப்பூர், ஜூலை 29- சிவப்பு டைரி இல்லை, சிவப்பு சிலிண்டரைப் (சமையல் எரிவாயு விலை) பற்றி பேச வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல மைச்சர் அசோக் கெலாட் பதிலடி கொடுத்தார்.

ராஜஸ்தானில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர சிங் குதா, கடந்த சில தினங்களுக்கு முன் அம்மாநில சட்டப்பேரவையில், முதலமைச்சர் அசோக் கெலாட் தொடர்பான முறைகேடான பரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் இருப்பதாகவும், ஒரு சிவப்பு டைரியை காண்பித்து அது குறித்து பேச வேண்டும் என்று அவைத்தலைவரை அணு கினார். இதனையடுத்து அவையில் அமளி ஏற்பட்டது.  அவைத்தலை வர் கட்டுபாடற்ற நடத்தை கார ணமாக ராஜேந்திர சிங் குதாவை சபையில் இருந்து இடைநீக்கம் செய்தார். 

ராஜேந்திர சிங் குதா சட்டப் பேரவையில் காட்டிய சிவப்பு டைரி அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. சிவப்பு டைரியை குறிப்பிட்டு முதல்வர் அசோக் கெலாட் தலை மையிலான காங்கிரஸ் அரசை பிர தமர் மோடி விமர்சனம் செய்தார்.

ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், இந்த ரெட் டைரியில் காங்கிரஸ் அரசின் இருண்ட செயல்களின் பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. சிவப்பு டைரியின் பக்கங்களை திறந்தால், பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் கூறு கின்றனர். இந்த சிவப்பு டைரி பற் றிய குறிப்பு காங்கிரஸின் பெரிய தலைவர்களை கூட வாயடைக்க வைத்துள்ளது. இந்த மக்கள் தங்கள் உதடுகளை சீல் வைக்க முயற்சித்தாலும், இந்த சிவப்பு டைரி இந்த தேர்தலில் பெரிய அடி யாக அமைகிறது. சிகப்பு டைரி என்பது  காங்கிரஸின் பொய் கடை யின் புதிய திட்டமாகும் என்று நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கொடூரத்திற்கு விளக்கம் அளிக் காமல் ராஜஸ்தானில் அரசு நிகழ்ச் சியில் அரசியல் பேசியிருந்தார்.

பிரதமர் மோடியின் குற்றச்சாட் டுக்கு ராஜஸ்தான் முதலமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் பதிலடி கொடுத்தார். அசோக் கெலாட் கூறியதாவது: வரும் நாட்களில் பிரதமருக்கு சிவப்புக் கொடி காட்டப்படும். பிரதமரின் பதவிக்கு அதன் சொந்த கண்ணியம் உள்ளது. பிரதமர் மோடியும் அவரது கட்சித் தலைவர்களும் எங்களை கண்டு பயப்படுகிறார்கள். அவர்கள் ராஜேந்திர சிங் குதாவை பலிகடா ஆக்கினர். பா.ஜ.க. பீதி யுடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக் களை முன்வைக்கிறது. பிரதமர் மோடியின் சிவப்பு டைரி கூற்று ஒரு இட்டுக்கட்டப்பட்ட கதை. அப்படி ஒரு சிவப்பு டைரி இல்லை. அவர்கள் சிவப்பு சிலிண்டரைப் (சமையல் எரிவாயு சிலிண்டர் விலை) பற்றி பேச வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 நாடாளுமன்றம் துவங்கி இரண்டு வாரம் ஆகிறது, ஜூலை இரண்டாம் வாரம் மணிப்பூர் கொடூர நிகழ்வுகள் காட்சிப் பதிவு களாக தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது, இது குறித்து நாடாளு மன்றத்திற்கு வந்து விளக்கம், தர எதிர்கட்சிகள் மோடியை வலி யுறுத்தி வருகின்றனர். ஆனால் மோடியோ நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ள மைதானத்தில் யாகம் செய்கிறார்,  காணொலி படமெடுக்கும் கருவிகளை பறக்க விட்டு விளையாடுகிறார். 

ஆனால் நாடாளுமன்றம் பக்கமே தலைகாட்ட மறுக்கிறார். இந்த நிலையில் அவர் அம்மாநில அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்டம் குறித்து விளக்குவதற்கு பதில் அங்கும் அரசியல் பேசிகொண்டு வருகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *