சென்னை, அக்.31- பொறியியல் துறையில் பல்வேறு வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவரும், துல்லியமான உலோக உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகிய ஓ.பி.எஸ்.சி. பெர்ஃபெசஷன் லிமிடெட் நிறுவனத்தின் தமிழ்நாட்டில் சிறீபெரும்புதூர் மற்றும் மகாராட்டிரத்தின் புனே ஆகிய நகரங்களில் உள்ள தொழிலகங்களில் அதன் உற்பத்தித் திறனை விரிவுபடுத்த நிறுவனம்
அய்.பி.ஓ. தொகையைப் பயன்படுத்த திட்ட மிட்டுள்ளது.
அதற்காக நிறுவனத்தின் பங்குகள், NSE, SME தளத்தில் பங்கொன்று ரூ.110 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது துல்லியப் பொறியியல் துறையில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான திறனில் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது என இந்நிறுவனத்தின் இயக்குநர் சாசஷம் லீக்கா தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ்.சி.-இன் தெளிவான வளர்ச்சித் திட்டம் மற்றும் மூலதன உபகரணங்கள் மற்றும் செயல்பாட்டு விரிவாக்கத்தில் உத்திசார் முதலீடுகள் அதை நல்ல நிலையில் வைக்கின்றன என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆங்கிலியன் ஒமேகா குழுமத்தின் தலைவர் உதய் நாரங் தெரிவித்துள்ளார்.