இந்திய விஞ்ஞானி ரெங்கையன் பெரியசாமி என்பவர் இந்தியப் பெருங்கடலின் மத்திய, தென் மேற்குப் பகுதியில் 12 புதிய உயிரினங்களைக் கண்டறிந்துள்ளார்.
இதில் 4 பவளப் பாறைகளும், 2 லாப்ஸ்டர் இனங்களும் அடக்கம்.
நாசா மேற்கொண்ட ஆய்வில், செவ்வாய்க் கோளின் லெபர்ட் ஸ்பாட் என்றழைக்கப்படும் பகுதியில் உள்ள பாறைகளில், உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ட்ராபெரி பழத்தில் வைட்டமின், பாலிஃபீனால், நார்ச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன.
அவ்வப்போது இதை உண்டுவந்தால் இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில், 13.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் ஒன்றின் தொல்லெச்சத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இது தாவர உண்ணி இனத்தைச் சேர்ந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.