ஒசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் தி.சினேகா துணைமேயர் சி.ஆனந்தையா ஆயோர் முன்னிலையில் நடைபெற்றது.பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது 79 ஆவது தீர்மானமான ஒசூர் உள்வட்ட சாலையில் இணையும் வஉசிநகர்,முனிஸ்வர்நகர் சந்திப்பு பகுதிக்கு தந்தைபெரியார் சதுக்கம் எனும் பெயர் வைக்கும் தீர்மானம் மாமன்ற உறுப்பினர் அனைவர் ஒப்புதலுடன் நிறைவேற்றபட்டது.