பெரும்புலவர் “ பாவலர் மணி” ஆ.பழநி அவர் களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (31.10.2024) காலை குறள் அரங்கில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்ட ப.க. செயலாளர் ந.செல்வராசன், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட ப.க. ஆலோசகர் எஸ்.முழுமதி, தொழிலதிபர் சீரிய பகுத்தறிவாளர் சா.நடராசன் முடியரசன் குமணன், கு.தேன்மொழி, புலவர் ஆ.பழநி அவர்களின் அண்ணன் மகள்கள் உமையாள், மணிமேகலை, பேரன்கள் ராமநாதன், காசிநாதன், பாலசுப்பிரமணியம், பேத்திகள் பிருந்தா, சோலை, பாரதி மற்றும் குடும்பத்தினரும் நண்பர்களும் பங் கேற்றனர்.