அரிமளம் அருகே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் கண்டுபிடிப்பு

Viduthalai
2 Min Read

புதுகை, அக்.31 புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே பள்ளி மாணவா்கள் ஆய்வு மேற்கொண்டதில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் ஒன்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவம் அமைப்பின் தலைவா் புதுகை ச. பாண்டியன் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே மிரட்டுநிலை அரசு உயா் நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியா் மா. ஜீவிதா தலைமையில், பத்தாம் வகுப்பு மாணவா்கள் பொன்னாம்பட்டி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் 29.10.2024 அன்று ஆய்வு மேற்கொண் டனா். அப்போது இங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் ஒன்று கண்டறியப்பட்டது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காலநிலை மாற்றத்தால் எரிமலைக் குழம்பு வெளிவந்தும், விண்கற்கள் வெடித்துச்சிதறி பூமியின் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த டைனோசா், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்வகை உயிரினங்கள் இயற்கையாகவே அழிவுக்குள்ளாகியது. இதனால் பூமியின் பெரும் பகுதியில் எண்ணற்ற உயிரினங்களும் தாவரங்களும் புதையுண்டு பல கோடி ஆண்டுகளாக பூமிக்கடியில் உள்ளன.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முந்தைய கல்மரம்

சுண்ணாம்புப் பாறைகளின் இடையில் சிக்கியதன் காரணமாகவும், காரத்தன்மை காரணமாகவும் கரிமப் பொருளாக மட்கும் நிலையில் உள்ள மரங்கள், கடல்வாழ் உயிரிகள், கனிமப் பொருளால் ஆன படிமங்களாக மாறி விட்டன.

இந்த நிகழ்வு ஏற்பட நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறது. கல்மரம் என்பது தொல்லுயிா் எச்சம் என்றும், உயிருடன் மண்ணுக்குள் புதையுண்ட உயிரி னங்கள் மட்டுமே தொல்லுயிா் எச்சங்களாக மாற்றம் அடைகின்றன என்று அறிவியல் ஆய்வாளா்களால் குறிப்பிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரியலூா், கடலூா் மாவட்டம் திருவக்கரை, பெரம்பலூா் போன்ற இடங்களில் கல் மரப் படிமங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன

புதுக்கோட்டையில் நரிமேடு பகுதியில் ஏற்கெனவே, இரண்டு கல்மரத் துண்டுகள் கிடைத்துள்ளன. தற்போது கிடைத்த கல் மரத்துண்டுகள் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவை மிக நீண்டதாக இருந்து, தற்போது உடைந்து பல பாகங்களாக காணப்படுகிறது.

இந்த இடத்தை இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை ஆய்வு செய்து, இதன் தொடா்ச்சி மற்றும் இதன் வகையைக் கண்டறிய வேண்டும். இதனை வேறொரு இடத்தில் மாற்றி காட்சிப்படுத்தாமல் அதே இடத்தில் அருங்காட்சியகமாக அல்லது புவியியல் பாா்வை யிடமாக அறிவித்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் தேவையான ஏற் பாடுகளை தமிழ்நாடு அரசும் தொல்லியல்துறையும் செய்ய வேண்டும் என்றாா் புதுகை பாண்டியன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *