30.10.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அடுத்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு எடுத்துள்ள ஒன்றிய அரசு, ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த முன்வராதது ஏன்? என்கிறது தலையங்க செய்தி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*’ஏகபோக பச்சாவோ சிண்டிகேட்’: அதானி குழுமம், முக்கிய ஒழுங்குமுறை அமைப்புகள், பாஜக இடையே ‘ஆபத்தான தொடர்பு’ இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டு. ப்ரீடிபிள் ஹெல்த் பிரை வேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் முழுநேர உறுப்பினரான பிறகும் அவர் தொடர்ந்து பங்கு களை வைத்திருந்தார் என்பது உட்பட செபி தலைவர் மீது காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
* எஸ்.சி. துணை ஒதுக்கீட்டை அமல்படுத்த கருநாடக மாநில அமைச்சரவை முடிவு. இந்த ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் அளித்திட மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும்.
* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பொது விசாரணைகளை தொடங்குகிறது, சில தலைவர்கள் EWS ஒதுக்கீட்டை ரத்து செய்ய வற்புறுத்தல்.
குடந்தை கருணா