புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் 80 மருத்துவப் பேராசிரியா்கள் பணி யிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளன.
புதுச்சேரி – திண்டிவனம் சாலை கோரிமேடு பகுதியில் ஒன்றிய அரசு மருத்துவ நிறுவனமான ஜிப்மா் அமைந்துள்ளது. இங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுவை – தமிழ்நாட்டுப் பகுதி மக்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.இதற்கு காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கிளை நிறுவனமும் உள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியா்கள் 26 போ், உதவி பேராசிரியா்கள் 35, காரைக்கால் ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியா்கள் 2, உதவி பேராசிரியா்கள் 17 என மொத்தம் 80 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பா் 21ஆம் தேதி மாலை 4.30 மணி வரையில் ஜிப்மா் இணையதளத்தில் தகுதி யானோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா் களுக்கான கல்வித் தகுதி, ஊதிய விவரம், பணி அனுபவம், வயது, கட்டணம் ஆகிய விவரங்களை ஜிப்மா் இணையதளத்தில் பாா்வையிடலாம் என இயக்குநா் ராகேஷ் அகா்வால் தெரிவித்துள்ளார்.