சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) பொதுச் செயலாளர் வ.மணிமாறன் அவர்களின் தந்தை சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் மு.சூரக்குடி சி.வயிரவன் (வயது 86) அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று (29.10.2024) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சி.வயிரவன் தி.மு.கழக கிளைக் கழக செயலாளராக செயல்பட்டவர், இந்தி எதிர்ப்புப் போராட்டம் என பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். அவரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இறுதி நிகழ்வு இன்று (30.10.2024) முற்பகல் நடைபெற்றது.
வருந்துகிறோம்
0 Min Read
		
			விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர,  உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும். 
			தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
			Leave a Comment
	
Popular Posts
				10% Discount on all books
							
			
