புதுடில்லி, அக்.30 மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பாக ஆலோ சிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று (28.10.2024) வெளியிட்ட பதிவில், ‘இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும், பதிவுத் துறை தலைவருமான மிருத்யுஞ்ஜய் குமார் நாராயணின் பதவிக் காலத்தை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. இதற்கு விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே அா்த்தம். ஆனால் இரு முக்கிய விவகாரங்களில் தெளிவு கிடைக்கவில்லை. புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் நாட்டிலுள்ள அனைத்து ஜாதிகளின் விரிவான கணக்கெடுப்பும் இடம் பெறுமா? அரசமைப்புச் சட்டத்தின் படி, இத்தகைய ஜாதிவாரி கணக் கெடுப்பை மேற்கொள்வது முற்றிலும் ஒன்றிய அரசின் பொறுப்பாகும்.
மனிதர்களுக்கானதல்ல பா.ஜ.க. ஆட்சி பசுக்களுக்குத்தான்!
பாஜக ஆளும் மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்க பல சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், இதற்கென தனியே பசு பாதுகாவலர்களும் உள்ளனர். இந்நிலையில், சாலைகளில் அலையும் பசுக்களை, தெரு மாடுகள் என யாரும் சொல்லக் கூடாது என ராஜஸ்தான் மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு சொல்வது, பசுக்களை அவமானப்படுத்துவதற்கு சமம் எனக் கூறியுள்ள அரசு, ‘ஆதரவற்ற’ மாடுகள் என்று அழைக்க அறிவுறுத்தியுள்ளது.