கன்னியாகுமரி மாவட்டம்
பாகோடு முதல்நிலை பேரூராட்சி
தூய்மை இந்தியா இயக்கம் அறிவிப்பு
ந.க.எண்.318/2024/அ1 நாள் 28.10.2024
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி, பாகோடு முதல் நிலை பேரூராட்சியைத் திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation Free Plus Town (ODF+) பேரூராட்சியாக அறிவித்திட பாகோடு முதல்நிலை பேரூராட்சியின் மன்ற ஒப்புதல் பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாகோடு முதல் நிலை பேரூராட்சியைத் திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation Free Plus Town (ODF+) பேரூராட்சியாக அறிவித்திட தங்கள் மேலான கருத்துருக்கள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின், செயல் அலுவலர், பாகோடு முதல் நிலை பேரூராட்சி, பிளாக் ஆபீஸ் அருகில், பாகோடு அஞ்சல்-629168 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 15.11.2024 மாலை 6.00 மணிக்குள் தெரிவிக்கலாம் என இதன் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
செயல் அலுவலர்,
பாகோடு முதல்நிலை பேரூராட்சி,
கன்னியாகுமரி மாவட்டம்.
வெ.ஆ.எண்:242/செ.ம.தொஅ/க.கு/நாள் 29.10.2024