இங்கும்!
ஜெர்மனி அரசுத்தலைவர்(சான்சிலர்) ஒலாஃப் சோல்த்சு இந்தியா வருகைபுரிந்துள்ளார்.
அவரை வந்தேபாரத் ரயிலில் அழைத்துச் சென்று இந்திய ரயில்வேயின் பெருமைகளைப் பற்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் பேசிக்கொண்டு இருந்த காட்சி.
அங்கும்!
அதே நேரம் மும்பை பாந்திரா ரயில் நிலை யத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் பண்டிகை மற்றும் சத்பூஜா கொண்டாட உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்குப் பயணம் செய்ய ஒன்றாகத் திரண்டனர். ரயிலில் ஏறுவதற்கு முன்பு ஏற்பட்ட நெரிசலில் சிக்கிப் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டனர்.
திருவிழாக் காலங்களில் மும்பையிலிருந்து பல லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்று தெரிந்தும் சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்படாததால் இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது.