உ.பி.யில் நீதிபதி –
வழக்குரைஞர்கள் மோதல்..!
உ.பி. மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ரவுடி ஒருவரின் பிணை மனு மீது விசாரணை நடை பெற்றது. அப்போது அவருக்கு பிணை வழங்க நீதிபதி மறுத்ததால் கோபமடைந்த வழக்குரைஞர்கள், நீதிபதியை தாக்கத் தொடங்கினர். நீதிபதியும் பதிலுக்கு அவர்களை அடித்தார். தகவலறிந்த காவல்துறையினர், வழக்குரைஞர்கள் மீது தடியடி நடத்தினர். பின்னர் வழக்குரைஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்றமே போர்க்களமாக மாறியது.
‘உலக பக்கவாத நாள்’
உலக பக்கவாத தினம் ஆண்டுதோறும் அக்.29 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மூளை ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் பக்கவாதம்(எ) மூளைத்தாக்கு (stroke) ஏற்படுகிறது. stress இன்றி உடலையும், மனதையும் உற்சாகமாக வையுங்கள். புகை, மதுவை தவிருங்கள். பக்கவாதத்தைத் (stroke) தடுக்க உடற்பயிற்சி, விளையாட்டுகளில் அதிகம் என்பதே 2024-க்கான கருப்பொருள்.
இவருக்கு பெயர் சாமியாராம்
தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என கூறி சர்ச்சையில் சிக்கியவர் அன்னபூரணி. தற்போது தி.மலையில் ஆன்மிக சொற்பொழிவாற்றி வரும் அவர், பேஸ்புக்கில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தானும் அரசுவும் (2ஆவது கணவர்) திருமணம் செய்து கொண்ட அதே NOV. 28இல், ரோகித் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார். விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கனமழைக்கு…
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஈரோடு, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, கரூர் உள்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பர் 1-இல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என் வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
ஆய்வு செய்ய…
சிறையில் உள்ள கைதிகள், அதிகாரிகளின் வீட்டு வேலைகளைச் செய்ய பயன்படுத்தப்படுகின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறைத்துறை (காவல்துறை தலைமை இயக்குநர்) டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருந்துகளின்…
புற்று நோய்க்கு எதிரான டிராஸ்டுசுமாப், ஓசிமெர்டினிப் மற்றும் துர்வலுமப் ஆகிய 3 மருந்துகளின் விலையைக் குறைக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.-
தீர்மானம்
சென்னை மாநகராட்சியின் செனாய் நகர் அம்மா அரங்கம், சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கம் தனியார் மூலம் பராமரிக்கப்படவுள்ளதாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட்டிப்பு
முதுநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், ஆண்டுக்கான உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபார்ம்) சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.