சென்னை, அக்.30- ஒன்றிய அரசு நிதி ஒதுக்கா விட்டாலும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன் கூட்டியே ஊதியத்தை மாநில அரசு வழங்கியது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு சில குறிப்பிட்டதொகைகளை ஒதுக் கு கிறது. அந்த தொகையை பயன்படுத்தி பள் ளிக்கல்வி சார்ந்த செயல்பாடுகள், திட்டங்களுக்கு செலவி டப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறைக்கு, ஒன்றிய அரசு நடப் பாண்டுக்கான நிதியை ஒதுக்கவில்லை. நடப்பாண் டுக்கான ரூ.2 ஆயிரத்து 152 கோடியில் முதல் தவணை யான ரூ.573கோடியை கடந்த ஜூன் மாதமே வழங்கப்பட்டு இருக்க வேண்டும். தற்போது செப்டம்பர் மாதத்துடன் 2ஆவது தவணையும் நிறைவு பெற்றுவிட்டது.
அந்தவகையில் 2 தவணைக் கான நிதியையும் ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. ஒன்றிய அரசின் பி.எம்.சிறீ பள்ளித் திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைய மறுப்பதால்தான் அந்த நிதி விடுவிக்கப்படாமல் இருப்பதாக சொல்லப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதி ஒதுக்கப்படாததால், அந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பாதிக்கப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை தமிழ்நாடு அரசு தன் சொந்த நிதியில் இருந்து வழங்கியது.
இதற்கிடையில் ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி நிதியை ஒதுக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையிலும், இதுவரை நிதி வரவில்லை. இந்த நிலையில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும், அக்டோபர் மாதத்துக்கான ஊதியத்தையும் தமிழ்நாடு அரசு வழங்கி யுள்ளது. அதிலும் தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே ஊதியம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு பகுதி நேர ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் வெளியிட் டுள்ள அறிக்கையில், ‘பகுதி நேர ஆசிரியர்கள் விழாக் காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட அக்டோபர் மாத ஊதியம் ரூ.12,500-அய் முன் கூட்டியேவழங்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.