29.10.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
நாட்டில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே அச்சமும் கோபமும் பரவி வருகிறது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு சிறுபான்மை சமூகங்கள் மீது திட்டமிட்டு வெறுப்பை பரப்புகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம்.
தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நவம்பர் 6 முதல் தொடங்கும். 80,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப் படுவார்கள், துணை முதலமைச்சர் மல்லு பட்டி தகவல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் பங்கேற்றது குறித்து தலைமை நீதிபதி கூறுகையில், நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையே ஒரு வலுவான உரையாடலைப் பேணுவதற்கு இந்தக் கூட்டங்கள் அவசியம் என்கிறார்.
தி இந்து
ரகசிய கோப்புகளை வைத்திருந்ததற்காக தி இந்து பத்திரிகையாளர் கைது என்பது ஜனநாயக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்: “ஜிஎம்பி மோதானிக்கு சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டிய அவதூறான முறையில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி.
தி டெலிகிராப்
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு முடிவு என தகவல். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எந்த முடிவும் இதுவரை இல்லை. எதிர்காலத்தில் கணக்கெடுப்பின் சுழற்சிகள் மாற்றப்படும் என்பதாகவும் தகவல்.
மகாராட்டிராவில் அமைந்திட வேண்டிய டாடா-ஏர்பஸ் பைனல் அசெம்பிளி லைன், குஜராத்திற்கு மாற்றம். இதே திட்டம் நாக்பூரில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும், டாடா-ஏர்பஸ் திட்டத்தை மாற்றியதற்கு காங்கிரஸ் கண்டனம்.
குடந்தை கருணா