பெங்களூரு, அக்.29- திராவிடர் இயக்க அறிஞர், பொதுவுடைமை பாவலர், தனித்தமிழ் பெரும்புலவர் சுயமரியாதைச் சுடரொளி
கி.சு.இளங்கோவன் படத்திறப்பு (27.10.2024) பெங்களுர் ‘தி இன்ஸ்டியூட்.ஆப் எஞ்சினியர்ஸ்’ ஹாலில் கருநாடக மாநில திராவிடர் கழக தலைவர் மு.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தென்மொழி திங்களிதழ் ஆசிரியர் முனைவர் மா.பூங்குன்றன் கி.சு.இளங்கோவன் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தாய்மொழி கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார், சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர்
ஆர்.டி.வீரபத்திரன், வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை செயலாளர்), வழக்குரைஞர் கோ.பாவேந்தன் (தமிழக மக்கள் முன்னணி), உலகத் தமிழ்க் கழகம் பெ.துரைசெல்வன்,
சு.வனவேந்தன் (ஒசூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர்) ஆகியோர் கி.சு.இளோங்கோவன் அவர்கள் பற்றிய பொதுத்தொண்டு, பன்முகத்தன்மை, தமிழ் தொண்டு குறித்து உரையாற்றினர்.
தமிழர் தலைவர் காணொலியில் இரங்கலுரை
கி.சு.இளங்கோவனின் தொண் டினைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இறுதியாக கி.சு.இளோங்கோவன் மகன் அருள் தனது நன்றியுரையில் தனது தந்தை வழி காட்டிய திராவிடம், தமிழ் வழி நடப்போம், அவர் விட்டு சென்ற பணியை உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தொடர்வோம் எனப் பேசி வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கருநாடக மாநில திராவிடர் கழக பொறுப்பாளர்கள் வீ.மு.வேலூ, கஜபதி, பார்த்திபன், பெரியார் நகர் வரதராஜன், தங்க வயல் கரிகாலன், ஈசிபுரம் சண்முகம் ஆனந்தன், தமிழ்வாணன், புலவர் கார்த்தியாயினி, ராசு மற்றும் தமிழ் ஆய்வாளர்கள், இயக்கத் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்வை கருநாடக மாநிலத் தமிழ் பத்திரிகை சங்க தலைவர் முத்துமணி ஒருங்கிணைத்து நடத்தினார்.