திருச்சி, அக்.29- திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் – கழக இளைஞரணி சார்பில்
28.10.2024 “தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?” என்ற தலைப்பிலான துண்டறிக்கைகள் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடம் கொடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் ஆ.அறிவுச்சுடர், திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.மகாமணி, திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.ராஜசேகர், பெரியார் மாளிகை தோழர் திருநாவுக்கரசு, பெரியார் புத்தக நிலைய தோழர் யோகேஷ் ஆகியோர் துண்டறிக்கை வழங்கினார்கள்.
திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் துண்டறிக்கை பிரச்சாரம்
Leave a comment