கலைஞர் தொலைக்காட்சி ஆசிரியர், திராவிடர் இயக்க ஆய்வாளர் ப.திருமாவேலனின் தாயாரும், பெரும்புலவர் படிக்கராமு வாழ்விணையருமாகிய முத்துலக்குமி அம்மாள் மறைவுற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று (29.10.2024) ப.திருமாவேலன் இல்லத்திற்குச் சென்று அவரது தாயாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உடன் சென்றிருந்தனர்.