சென்னை, அக்.29- அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 773 தூய்மைப் பணியாளா்கள், 458 காவலா்கள் என 1,231 பணியாளா்களுக்கு டிசம்பா் மாதம் வரை ஊதியம் வழங்க கருவூலத் துறைக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி அனைத்து மாவட்ட கருவூலக் கணக்கு அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2,001 காவலா் மற்றும் 2,999 தூய்மைப் பணியாளா் என 5,000 பணியிடங்கள் 2012-ஆம் ஆண்டு தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன. தேவையின் அடிப்படையில் 773 தூய்மைப் பணியாளா், 458 காவலா் என 1,231 பணியிடங்களுக்கு மட்டும் 2021-இல் தொடா் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கான பணிக்காலம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவு பெற்றது.
அதன்பின்னா் ஊதியக் கொடுப்பாணைகள் மூலம் சார்ந்த பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மேற்கண்ட பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குவதற்கான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது.