தீபாவளியில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள் பற்றி தந்தை பெரியார் எடுத்துக்காட்டும் கணக்கு விவரம்:
1. துணி தேவை இருக்கின்றவர்களும். தேவை இல்லாதவர்களும் தீபாவளியை உத்தேசித்துப் புதுத்துணிகளை வாங்குவது.
2. மக்கள். மருமக்களை மரியாதை செய்வதற்கென்று யோக்கியதைக்கு மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றல்லாதனவுமான துணிகள் வாங்குவது.
3. அர்த்தமற்றனவும் பயனற்றனவுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகளை வாங்கிக் கொளுத்துவது.
4. பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டம் கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதைச் சூதாட்டத்திலும், மதுக்குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்துகொள்வது.
5. இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பயணம் செய்து பணம் செலவழிப்பது.
6. அன்று ஒவ்வொருவர் வீட்டிலும் உணவுகளை (பலகாரங்கள் – காய்கறி, சாப்பாட்டு வகைகளை) தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகத்தைக் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும்.
7. இந்தச் செலவுகளுக்காக கடன்படுவது.
– தந்தை பெரியார்
(‘உண்மை’ – 14.10.1971)