சென்னை, அக்.29- பாடப் புத்தகத்தில் இருந்து ஆரியம்-திராவிடம் பாடத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்கும் அளவுக்கு இந்த உயர்நீதிமன்றம் நிபுணத்துவம் பெற வில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து உத்தரவிட்டுள்ளனர்.
ஆரியம் –- திராவிடம்
சென்னை உயர்நீதிமன்றத்தில், மகாலிங்கம் பாலாஜி என்ப வர் தாக்கல் செய்துள்ள மனு வில், “ஆரியன், திராவிடன் இனங்கள் என்று 2 மனித இனங்கள் உள்ளன என்று கூறி மக்களைப் பிரிக்கின்றனர். ஆனால்,அப் படி இனக்குழுக்களே இல்லை. இதுபோன்ற பொய் தகவல்கள் சமுதாயத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், தமிழ்நாடு அரசு இந்த பொய் பிரச்சாரத்தை பாடநூல்கள் வழியாக பரப்பி மாணவர்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. அதனால், ஆரியம்-திராவிடம் என்பதை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டும். இந்த பாடத்தை வைத்ததற்காக பொதுமக்களிடம் அரசு மன் னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
நிபுணர்களின் பரிந்துரை
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தை அதற்கான குழுக்கள் உருவாக்குகிறது. மனுதாரர் இந்த கோரிக்கையை மாநில கல்வி ஆராய்ச்சி மற்று பயிற்சி கவுன்சில் இயக்குநரிடம் மனுவாக கொடுத்தால், அதை கவுன்சில் பரிசீலிக்கும்” என்றார்.
ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், மனுதாரர் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் மனு கொடுத்தால் பரிசீலிக்கப்படும்” என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஆரியம்-திராவிடம் என்பதே பொய் பிரச்சாரம் என்று மனுதாரர் கூறுகிறார். அது உண்மையா, பொய்யா? என்று முடிவு செய்யும் அளவுக்கு வரலாற்றிலோ, மனித இனங்களின் தோற்றம் குறித்தோ இந்த நீதிமன்றம் நிபுணத்துவத்தை பெறவில்லை.
எனவே, இதுகுறித்து ஆரா யாமல், மனுதாரருக்கு எந்த நிவா ரணத்தையும் வழங்க முடியாது. எனவே, இந்த வழக்கு மனுவையே கோரிக்கை மனுவாக கருதி, மனுதாரரின் கோரிக்கையை 12 வாரத்துக்குள் ஒன்றிய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். அப்போது மனு தாரரின் கருத் தையும் கேட்க வேண்டும். இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறோம்.
-இவ்வாறு நீதிபதிகள் கூறி யுள்ளனர்.