நேற்று (27.10.2024) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட “என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டியில், வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், தி.மு.க.தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன், பேச்சாளர்கள் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர்.