பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய கழக இளைஞர் அணி தோழர் க..பிரபாகரன், க..சுப்ரமணியன் ஆகியோரின் தந்தை ச.கண்ணன் 26-10-2024 அன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இவர் 1990 ஆம் ஆண்டு பேராவூரணியில் தந்தை பெரியார் சிலை அமைப்பு குழு உறுப்பினராக இருந்து செயல்பட்டவர் ஆவார். பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழகம் மற்றும் பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அவர் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.