திருச்சி, அக்.28- பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கம் அதிகரிக்கவும், இந்திய அஞ்சல் துறை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத் தவும் ஒன்றிய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற உதவித்தொகை திட்டத்தின் அடிப்படை யில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அவர் களின் ஆராய்ச்சித் திறன் மேம்பாடு மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு சார்ந்த வினாடி-வினா எழுத்துத் தேர்வு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான இந்த வினாடி-வினா எழுத்துத் தேர்வு திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 26.10.2024 (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடை பெற்றது.
இதில் பள்ளியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 70க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இத்தேர்வுக்கான சிறப்புக் கண்காணிப்பாள ராக, திருச்சி மாவட்ட தலைமை அஞ்சல் துறையின் துணைத் தலைவர் கே.சீனிவாசன் மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் வந்திருந்து தேர்வு எழுதும் மாணவர் களை ஆய்வு செய்தனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை இத்தேர்வுக் கான பொறுப்பாளரும் பள்ளியின் முதுகலை ஆசிரியருமான, டி.இரு தய இசபெல்லா உள் ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.