சென்னை, அக்.28- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத்துறை யில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது.
வேளாண் துறையில் உற்பத்தி
தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் விவசாயிகள் பால் மிகுந்த அன்புகொண்டு வேளாண் மைத்துறை என அழைக்கப்பட்ட துறையின் பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என தான் ஆட்சி பொறுப்பேற்ற 2021ஆம் ஆண்டிலே அறிவித்து விவசாயிகளுக்காக பல சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இந்த திட் டங்களால் வேளாண் உற்பத்தி பெருகி உள்ளது.
விவசாயிகள் வளம் பெறுகின்றனர். தமிழ்நாடு உணவு உற்பத்தியில் முன்னேறி உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின்னர் பயிர் காப்பீட்டு திட்டத் தில் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 29 லட்சத்து 34 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 148 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 19.84 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களுக்கு மொத்தம் ரூ.833.88 கோடி நிவாரண மாக வழங்கப்பட்டு, 11.95 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
உழவர் சந்தையின் புதுப்பொலிவு
முதன் முறையாக ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் அமைக்க ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ரூ.27.5 கோடி செல வில் 100 உழவர் சந்தைகள் புனரமைக் கப்பட்டு உளளன. 14 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ரூ.2கோடியே 75 லட்சம் செலவில் 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் எந்திரம் அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் உழவர் சந்தை புதுப்பொலிவுடன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தில் 3 புதிய வேளாண் கல்லூரிகளும், ஒரு தோட்டக்கலை கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடங்கிய முதல் ஆண்டிலேயே உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 11சதவீதம் அதாவது 11.74 லட்சம் டன் அதிகரித்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரூ.187 கோடி ஒதுக்கீட்டிலான குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு அளித்த ஊக்கத்தினால் 2021இல் 4.90 லட்சம் ஏக்கரிலும், 2022இல் 5.36 லட்சம் ஏக்கரிலும் 2023ஆம் ஆண்டில் 48 ஆண்டுகளாக இல்லாத சாதனையாக 5.59 லட்சம் ஏக்கரிலும் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர்.
முன்னணி மாநிலமான தமிழ்நாடு
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் மூலம் 44 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடங்கிய 2021 முதல் வேளாண்துறையில் அடைந்துவரும் முன்னேற்றங்களுக்காக பல்வேறு விருதுகளை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
சென்னை கதீட்ரல் சாலை யில் செங்காந்தன் பூங்கா அருகில் 6.9 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடியில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதியன்று திறந்து வைத்தார்.
இந்த பூங்கா தமிழ்நாடு வேளாண்துறை வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே ஒரு புதிய அணிகலனாக விளங்கி அனைவரையும் கவர்ந்துள்ளது.
மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத்துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.