சென்னை, அக். 28- அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணியில் உள்ள 7,979 ஆசிரியா்களுக்கும் வரும் டிசம்பா் மாதம் வரை ஊதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள் ளது. பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி மாவட்ட கருவூலக் கணக்கு அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழ்நாட்டில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8ஆம் வகுப்புகளுக்கு 7,979 பட்டதாரி ஆசிரியா் பணியி டங்கள் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் தற்காலிக அடிப் படையில் தோற்றுவிக்கப் பட்டன.
அவா்களுக்கான பணிக்காலம் கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவு பெற்றது. அதன்பின்னா் தற்காலிக பணி நீட்டிப்பு வழங்கி ஊதியக் கொடுப்பாணைகள் மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குவதற்கான கருத்துரு தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் உள்ளதால், அதுதொடா்பான இறுதி முடிவு வெளியாகும் வரை பள்ளிக்கல்வித் துறை இயக்குநரின் பரிந்துரையை ஏற்று 7,979 தற்காலிக ஆசிரியா்களுக்கும் வரும் டிசம்பா் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் ஊதியப் பட்டியல் தாக்கல் செய்யும்போது அதை ஏற்று ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.