25.10.2024 வெள்ளிக்கிழமை பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாகவும் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாகவும் திருக்குறள் திருவிழா காலை 10 மணி முதல் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மொழியின் செயலில் கற்றல் கற்பித்தலில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியானது மழலையர் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடைபெற்றது. திருக்குறளின் ஊக்கமுடைமை அதிகாரத்தில் பேச்சுப் போட்டியானது 6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்றது. வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்றது. போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களின் திறமையினை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எமது பள்ளியின் முதல்வர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக திருக்குறள் திருவிழா
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:திருச்சி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
