சென்னை, ஜூலை 30 மக்கள்தொகை கணக் கெடுப்புப் பணிக்காக ஒன்றிய உள்துறை உத்தரவின்படி, மாவட்டம், வட்டம், காவல் நிலைய எல்லை விரிவாக்கம் இந்த ஆண்டு டிசம்பர் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக பொதுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பொதுத் துறை செயலர் கே.நந்தகுமார் அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கை: ஒன்றிய உள் துறையின் கீழ் செயல்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரகம், தற்போது நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும் போது சம்பந்தப் பட்ட வட்டம், மாவட்டத் தின் எல்லையில் எவ்வித மாற்றமும் செய் யப்படக் கூடாது. ஒன்றியஉள்துறையின் கீழ் செயல்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணை யரக கூடுதல் பதிவாளர், கடந்த ஜூன் 30-ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், நிர்வாக அலகுகளின் எல்லை விரிவாக்கம் நிறுத்தி வைப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், புதிய அலகுகள் உருவாக்கத்துக் கான தடை நீடிக்கப் படுவதாகவும் அறிவித்துள்ளது.
எனவே, தமிழ் நாட்டில் உள்ள நகராட்சிகள், வருவாய் கிராமங்கள், நகரங்கள், வட்டங்கள், காவல் நிலையங்கள், உள் சரகங்கள், மாவட்டங்கள் உள்ளிட்ட நிர்வாக அலகுகளின் எல்லைகள் விரிவாக்கம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக் கப்படுகின்றன. ஏதேனும் எல்லை மாற்றம் தொடர்பான கருத்துகள் நிலுவையில் இருந்தால் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு கணக்கெடுப்புப் பணிகளுக்கான இயக்குநரிடம் தெரிவிக்க வேண்டும்.வருவாய் நிர்வாக ஆணையர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் ஊரக வளர்ச்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகள் இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சிகளின் ஆணையர்கள் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.