சென்னை, அக்.27– தமிழ்நாட்டில் கடந்த மாதம் வரை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 47½ லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், ஆண்களை விடவும் பெண்களே அதிகமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியா முதல் இடத்தில் அமர்ந்தி ருக்கிறது.
இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை விகிதம் கடந்த மாதம் 7.8 சதவீதம் ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் இது 3.9 சதவீதம் ஆக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் 38 மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்களும், சென்னை மற்றும் மது ரையில் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டு மய்யமும், சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மய்யம், மாநில தொழில் நெறி வழிகாட்டு மய்யமும் செயல்படுகிறது.
வேலூர், திருச்சி, நெல்லை, கோவை மற்றும் கடலூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின ருக்கான பயிற்று விப்பு மற்றும் வழிகாட்டும் மய்யங்களும், ஊட்டியில் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டு மய்யமும் செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள இந்த அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்களில் கடந்த மாதம் (செப்டம்பர்) வரையிலான நிலவரப்படி 21 லட்சத்து 74 ஆயிரத்து 48 ஆண்கள், 25 லட்சத்து 76 ஆயிரத்து 4 பெண்கள் என 47 லட்சத்து 50 ஆயிரத்து 52 பேர் பதிவு செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் விண்ணப்பித்து பெற்ற தகவலில் இது தெரிய வந்துள்ளது.
வேலை வாய்ப்புக்காக பதிவு செய்த வர்களில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் பெண் கல்விக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கொடுக்கப்பட்டுவரும் முக்கியத்துவத்தையும், அதன் காரணமாக கல்வி அறிவு பெற்ற பெண்கள் குடும்ப பொறுப்பினை தோளில் சுமப்பதற்கு வருவாய் ஆதார பங்களிப்பினை வழங்குவதற்காக தாமாக முன்வந்திருப்பதையும் காட்டுகிறது.
வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தவர்கள் பட்டப்படிப்புக்கு கீழ் படித்தவர்கள், இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் முது நிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என மூன்றாக வகைப்படுத்தப்
பட்டுள்ளனர்.
இதில், 10ஆம் வகுப் புக்கு கீழ் படித்தவர்கள் முதல் முதுநிலை பட்டப் படிப்புகள் வரை படித் தவர்கள் இடம் பெற் றுள்ளனர்.
அவர்களில் மருத்துவம், சட்டம், பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை முடித்தவர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.
இதேபோல கடந்த 2014 முதல் 2023 வரையிலான 10 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 56 ஆயிரத்து 897 பேர் வேலைவாய்ப்பினை பெற்று இருப்பதாகவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
முதுநிலை பட்ட படிப்புகள் படித்து பதிவு செய்தவர்கள்
வகை – எண்ணிக்கை
கலை – 1,27,943
அறிவியல் – 1,55,882
வணிகவியல் – 41,578
முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் – 1,86,766
பொறியியல் – 1,74,640
மருத்துவம் – 680
வேளாண்மை – 376
வேளாண்மை பொறியியல் – 3
கால்நடை
அறிவியல் – 98
சட்டம் – 130
இதர பட்டப்
படிப்புகள் – 1,60,636
இளநிலை பட்டப்படிப்பு படித்து பதிவு செய்தவர்கள்
வகை – எண்ணிக்கை
கலை – 3,42,016
அறிவியல் – 5,02,493
வணிகவியல் – 2,52,125
பட்டதாரி
ஆசிரியர்கள் – 2,53,498
பொறியியல் – 2,01,372
மருத்துவம் – 1,178
வேளாண்மை – 6,705
வேளாண்மை
பொறியியல் – 317
கால்நடை
அறிவியல் – 762
சட்டம் – 1,655
இதர பட்டப்
படிப்புகள் – 1,18,829
தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மய்யங்களில் இணைய தளத்தில் பதிவு செய்தவர்களில் பணி நியமனம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
பொதுத் துறையில் பணிநியமனம் பெற்றவர்கள்
2014 – 13,166
2015 – 9,176
2016 – 7,383
2017 – 3,398
2018 – 4,074
2019 – 6,056
2020 – 3,617
2021 – 4,767
2022 – 2,608
2023 – 2,652
(அரசின் பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் அரசு பணி பெற்றவர்கள் மற்றும் நாளி தழ் விளம்பரம், வேலைவாய்ப் பக பரிந்துரை மூலம் அரசுபணி பெற்றவர்கள் உள்பட அனைத்து வகை யிலும் அரசுப் பணி பெற்ற வர்கள் விவரம்.)
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கல்வித் தகுதி வாரியாக கடந்த மாதம் வரை பதிவு செய்த வர்கள் விவரம் வருமாறு:-
பட்டப் படிப்புக்கு கீழ் படித்து பதிவு செய்தவர்கள்
வகை – எண்ணிக்கை
10ஆம்
வகுப்புக்கு கீழ் – 2,00,445
10ஆம் வகுப்பு – 35,69,241
12ஆம் வகுப்பு – 23,57,335
டிப்ளமோ – 2,15,878
இதர டிப்ளமோ – 76,128
இடைநிலை
ஆசிரியர்கள் – 1,29,065
அய்.டி.அய். (தேசிய வர்த்தக சான்றிதழ்)
என்.டி.சி. – 1,32,161
அய்.டி.அய். (தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ்) என்.ஏ.சி. – 56,043